நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு
(தண்ணீர் எந்த நிலத்தோடு சேர்ந்திருக்கிறதோ அந்த நிலத்தின் சாரமுள்ளதாக மாறிவிடும்.அது போல இயற்க்கையாக நல்ல புத்தியுடையவர்களும் அற்பபுத்திகாரர்களுடன் சேர்ந்தால் கெட்டுபோவார்கள் )
டிபன் பாக்ஸ்சில் துண்டு காகிதம்....
அன்றைக்கு தாத்தாவின் மனதுக்கு மிக கஸ்ட்டமாக இருந்தது காரணம்,மாமாவை நினைத்து. நாலைந்து பொட்டை பிள்ளைங்களுக்கிடையே மாமா ஆண்வாரிசு தாத்தாவுக்கு.
ஸ்காட் கிருஸ்த்தவ கல்லூரியில் மாமாவை பியூசி படிக்க சேர்த்திருந்தனர்.கல்லூரி ஆசிரியர் ஒருவர் தாத்தாவை சந்தித்த வேளையில் உங்க பையன் கல்லூரிக்கு வந்து அதிக நாளாச்சே என்ற
பெரிய குண்டை தூக்கிப்போட்டார்.தாத்தா அதிர்ச்சி அடைந்தார்கள், தாத்தா மிகவும் சாதுவான ஆள்தான்,ஆனால் அவருக்கு கோபம் வந்துவிட்டால் அவ்வளவு தான்.அன்பாக இருப்பார் அதே அளவு கண்டிப்பாகவும் இருப்பார் .வீட்டுக்கு வந்த தாத்தா மாமாவை லெப்ட் அண்டு ரைட் வாங்கி விட்டார்.அப்ப ஒரு உண்மையும் வெளிவந்தது மாமா அந்த வருடம் முழுவதும் கல்லூரி பீஸ் எதுவுமே கட்டவில்லை என்பதும்.மாமா ஜாலியாக கல்லூரியை கட்டடித்து ஊர் சுத்தியுள்ளார்கள் என்ற குட்டும் வெளிப்பட்டது.இதற்கெல்லாம் யார் கம்பனி என்று பார்த்தால் மாமாவின் நெருங்கிய நண்பர் ஜான்சன் ஆகும். மாமாவை தாத்தா கண்காணிக்க தொடங்கினார்கள். மாமாவுக்கு வீட்டிலும் கல்லூரியிலும் நெருக்கடி ஆரம்பித்தது.

மாமாவுக்கு மனஉளச்சல் அதிகமானது.படிப்பு எட்டிக்காயாக கசந்தது.நண்பர்கள் இருவருமாக திட்டம் தீட்டினர்.அதற்கான நாள் குறித்தனர்,நாம இருவருமா சேர்ந்து எங்காவது ஓடிவிடலாமென்று முடிவு செய்தனர்.தாத்தாவின் நண்பர் மாமா கல்லூரிக்கு செல்வதால் போய் வர வசதியாக புதிய சைக்கிள் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்திருந்தார்கள் அதையும் விலைக்கு விற்று அந்த பணத்தையும் எடுத்தார்கள்.
மாலையில் இன்னொரு நண்பர் மூலமா தனது டிபன்பாக்ஸ் மற்றும் புத்தகங்களையும் வீட்டுக்கு கொடுத்தனுப்பினார்கள். வெகு நேரமாகியும் மாமா வீடு திரும்பாததால் யாவரும் கலங்கிப்போனார்கள்.கொடுத்தனுப்பிய மாமாவின் டிபன்பாக்ஸ்யை கழுவ திறந்து பார்த்தால் அதில் துண்டு சீட்டு காகிதத்தில் ஒரு லெட்டர் எழுதி இருந்தது."யாரும் என்னை தேட வேண்டாம் நான் ஊரை விட்டு போகிறேன்" என்று மட்டும் எழுதியிருந்தார்கள்.
வீட்டில் சகோதிரிகள் அனைவரும் அழுது புலம்பினார்கள்,தாத்தா தேடாத இடமில்லை.மிகுந்த வருத்தத்தில் வீடே சோகமானது.பாட்டி படுத்த படுக்கையாகிவிட்டார்கள்.ஆள் வைத்து ஊர் முழுக்க சல்லடையாக தேடுகிறார்கள்,எந்த தகவலும் கிடைக்கவில்லை மாமாவைப்பற்றி.
மாமா காணாமல் போன தகவல் எங்க அப்பாவின் காதுகளுக்கு எட்டியது.ஆளுக்கு ஒரு பக்கம் தேடி சலித்து சோர்ந்துவிட்டனர்.அப்பாவுக்கு ஒரு பொறிதட்டியது மாமா மதுரைக்கு போயிருக்கலாம் என சந்தேகம் உருவானது.
காரணம் அந்தவேளையில் தான் எங்கள் அம்மாவுக்கு அரசாங்க வேலை மதுரையில் கிடைத்திருந்தது. அதற்கு மாமா தான் மதுரைக்கு போய் அம்மா தங்ககுவதற்கான வீடு பார்த்து கொடுத்தது,மற்றும் பல உதவிகளையும் செய்தார்கள்.எனவே எங்கள் அப்பா மதுரைக்கு கிளம்பி சென்று ஒவ்வொரு விடுதியாக தேடியதில், ஒரு விடுதியில் மாமாவையும் அவர்களின் நண்பரையும் கண்டு பிடித்தனர். பின்பு நல்ல வார்த்தைகள் கூறி மாமாவுக்கு ஒரு கெடு விதித்தனர். அதாவது பத்து நாட்கள் மதுரையில் அம்மாவின் அரவணைப்பில் தங்கி வேலை தேடிகொள்ள வேண்டும்,இல்லையெனில் ஊருக்குப் போய்விடவேண்டும் என்று.மாமா தினம்தோறும் மதுரை மாநகரில் வேலை தேடி கம்பனி, கடையாக அலைந்தார்கள் ஆனால் மாமாவுக்கு வேலை கிடைக்கவில்லை.எனவே கெடுமுடிந்து மாமா ஊர் வந்து சேர்ந்தார்கள்.
கல்லூரிக்கு போக விருப்பம் இல்லையென தாத்தாவிடம் தெரிவித்தார்கள்.பின்பு மாமாவை பாலிடெக்கனிக்கில் சேர்த்துவிட்டனர்.என்ன போதாத காலமோ அங்கும் மாமாவுக்கு படிப்பை தொடரமுடியவில்லை.பின்பு மாமா வேலை தேடி சென்னை சென்றார்கள்.அங்கு அவர்களுக்கு கிடைத்தது ஹார்பரில் வடம் இழுக்கும் வேலை. இரண்டு மாதங்களில் மாமா நொந்து நூடில்ஸ் ஆகி கைகளெல்லாம் பிய்ந்து ஊர்வந்து சேர்ந்தார்கள்.
மற்றுமொரு மனவெளியுடன் சந்திப்போம்...
No comments:
Post a Comment