Thursday, July 1, 2010

”மாமா”ங்கம்


தாயின் முலைப்பால்
அருந்தும் முன்பே சேனை

ஸ்மாலை என் பிஞ்சு அதரத்தில்

ஊற்றி தந்தவர்

என் தாய் மாமன்.


தேகத்திலும் தலையிலும்

ஸ்பிரிங் முடி

பருத்த வயறு

லேம்பி ஸ்கூட்டர்

முகம் முழுவதும் தவழும்

புன்னகை

இருக்கும் இடமுழுவதுமாக

வியாபிக்கும் நகைச்சுவை

கிண்டலும் கேலியுமாக

தழும்பிக்கிடக்கும்.


எளிதில் யாரிடமும்

பழகி கொள்ளுவதும்

பழகியவர்களை தன்னுடன்

காந்தமென ஈர்த்துக்கொள்ளும்

மிக அற்புத மானிடன்.



மெழுகுபோல

தன் வாழ்க்கையை பிறருக்கு

வெளிச்சம் காட்டியவர்.



குடிகொண்டவளையும்

வர்த்தகத்தையும் ஒருங்கே

அணைத்துக்கொண்ட

மிக சாத்மீகமானவர்.


லாபத்தையும் நஸ்ட்டத்தையும்

சமமாக பாவிக்கும்

அதிராத மனதிடன்.


காலம் டாப்கியரில்

ஸ்பீடாக கடந்து போயுள்ளது.


பிஞ்சுவிரல்களால் உங்கள்

கரம் பிடித்து நடை பயின்ற

நான் தனிமையின்கூட

வெறுமையாய் நிற்கின்றேன்.


வர்ணங்கள் நிறைந்த

உங்களின் நினைவுகள்

எங்கள் உள்ளங்களில்

ஊரல்களாக Blended

தேக்கிவைத்துள்ளோம்.


இன்று என் மகன்

உங்களை போலவே

நகைச்சுவை செய்கிறான்

நாளை என் மகன்

வயிற்று பேரன் முகத்தில்

உங்களை காண்போம்.......